Tuesday, 12 August 2008 03:43
அருளாளன் அன்பாளன் கருணையாளன் கிருபையாளன் விண்னையும் மண்ணையும் படைத்து பராமரித்து அருள்புரிபவன் நித்தியமானவன் நிரந்தரமானவன் வல்லோன் அல்லாஹ் உன் திருநாமத்தின் பெயர் கொண்டு இதை ஆரம்பம் செய்கிறேன். பல்கலைக்கழகங்கள் வந்து பாடங்கள் கற்ற படிப்பறியா உம்மி நபியே ! பண்பாளரெ !அன்பாளரே ! எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து. எங்கள் ஊணிலும் உயிரிலும் கலந்துவிட்ட அல்லாஹ்வின் தூதரே ! அழகிய முன்மாதிரியே ! முத்துமுஹம்மது(ஸல்) அவர்களே ! உங்களின் புகழ்பாடும் ஸலவாத்தை மொழிந்து இதனை தொடங்குகிறேன்.
"செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையிலே அமைகின்றன" என்ற நபிமொழியின்படி எங்கள் சங்கத்தின் சேவைகளும்-சமுதாயப்பணிகளும் அமைந்துள்ளன.

மனிதனை மனி தனாக வாழவைக்கக்கூடிய உயரந்த இஸ்லாமியக் கொள்கைகளை,அதன் சிறந்த கோட்பாடுகளை முழுமனித சமுதாயத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோ க்கத்திலும்,நமது சமுதாய மக்களிடம் இஸ்லாம் பற்றிய விழிப்புனர்வை ஏற்படுத்துவதற்காகவும் 'முற்றிலும் மனிதசமுதாய சேவை' என்ற சிறந்த நோக்கத்துடன் கட ந்த 05-09-1931-ம் ஆண்டு இச்சங்கம் எமது பெரியார்கள்,அறிஞர்களால் தோற்றுவிக்கபட்டது. அல்ஹம்ந்துலில்லாஹ் அப்பொழுது இதன் பெயர் "இஸ்லாமிய மத அபிவிருத்திச் சங்கம்"என்பதாகும்.
பின்னர் கால மாற் றத்தில் "முஸ்லீம் பொதுநலச் சங்கம்" எனவும் அதன் பின்னர் கடந்த 1934ம் வருடம் தற்போதய பெயரான "முஸ்லீம் பொதுஜன சங்கம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டு "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற நோக்கத்தில் தனது செயல்பாட்டினை தொடர்கிறது.
இச்சங்கம் அழகங்குளம் முஸ்லீம் ஜமாத் நிர்வாக சபையின் நேரடி கண்காணிப்பு மற்றும் ஆலோசனைகளின்படி சுயமாகவும்,சுதந்திரமாக இயங்கும் அமைப்பாகும். இவ்வூரில் பிறந்த வயது வந்த ஆண்கள் அனைவரும் இச்சங்கத்தின் உறுப்பினராகவும்,பொருப்பாளராகவும் நிர்வாகிகளாகவும் பணியாற்றும் விதமாக இச்சங்கத்தின் சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடமிருந்தும்,உறுப்பினர்களிடமிருந்தும் பெறப்படும் சந்தாக்கள் மற்றும் நன்கொடைகள் மூலம் இச்சங்கத்தின் நிதி ஆதாரங்கள் பராமரிக்கபடுகின்றன.
"மற்றோர்களின் நலம் பேனுவதில் சேவை செய்வதில் இறைவனின் அருள் நிச்சயம் இருக்கிறது" என்ற திருமறையின் அடிப்படையில் எங்கள் சங்கத்தின் சேவைகள் அமைந்துள்ளன. சமுதாயத்தில் உள்ள நலிந்தோர்கள்,ஏழைகள் மற்றும் தேவை உள்ளோர் முன்னேற்றத்திலும் அவர்களின் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதிலும் இச்சங்கம் தனது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களிலும் இச்சேவைகள் முழுவீச்சோடு தொடரும் என உறுதிபட
தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இயற்கைப் பேரிடர்கள் மற்றும் இயற்கைச்சீற்றங்களினால் மக்கள் பாதிக்கப்படும் பொழுது அவர்களின் உடமைகளுக்கு அழிவுகள் ஏற்படும் பொழுது அந்த மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதில், அவரகளுக்கு சேவை செய்வதில் இச்சங்கமும், இச்சங்கத்தின் உறுப்பினர்களும் ஜாதி,மத பேதமற்ற வகையில் பணம்
பொருள் மற்றும் உடல் உழைப்பின் மூலம் தனது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது.
கடந்த 26/12/2004-ல் தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி பேரழிவின் போது எமது சங்கம் செய்த மக்கள் சேவைகள்,சங்கத்தின் உறுப்பினர்கள் ஆற்றிய சிறந்த பணிகள் முற்றிலும் போற்றத்தக்கவை-பாராட்டஉகந்தவைகள். "சுனாமி" ஆழிப் பேரலையின் அழிவினால் முற்றிலும் பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டம்,மற்றும் நாகை மாவட்டங்களின் உள்ள கடலோரக் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆருதல் கூறி அரவனைத்து, அவர்களுக்கு நிதி வழங்கி,மேலும் அவர்களுக்கான உணவு,உடை அனைத்தும் வழங்கி அவர்களின் அளவிடமுடியா பெரும் துயரத்திலும்,துன்பத்திலும் பங்கெடுத்து அம்மக்களுக்கு எமது சங்கத்தின் உறுப்பினர்களும்,நிர்வாகிகளும் செய்த சிறப்பான பணியும்,சேவையும் எமது சங்கத்தின் உயரிய நோக்கமான'சமுதாயச் சேவையின்' வெளிப்பாடாகும். இந்த வகை துயர்துடைப்புப் பணிகளில் எமது முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகளுடன் இணைந்து நாங்கள் செய்த இந்த தூய பணி எங்களுக்கு மனநிறைவையும்,அளவிலா மகிழ்வையும் தந்ததாகும்.
காரணம் இந்தவகை பணிகள் "வல்லரஹ்மான் இணை துணையற்ற அல்லாவிற்கு மிகப்பிரியமான அமலாகும்" மேலும் அவனின் அளவிலா அன்பையும்,அருட்கொடைகளையும் நாம் முழுதுமாகப் பெற்றுக்கொள்ள கிடைத்த நல் வாய்ப்பாகும். இந்த தூயபணியினை வல்ல ரஹ்மான் அங்கிகரித்து அருள்புரிவானாகும். ஆமின் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து செய்வதற்கு கிருபையும் உதவியும் செய்வானாக ஆமின்
சமுதாயச் சேவையின் பிரிதோர் சிறந்த பணி இறந்து போனவர்களை அடக்கம் செய்யும் நிகழ்வுகளில் எமது சந்கம் செய்யும் இஸ்லாமிய அடிப்படை கடமைகளின் பணியாகும். இறந்து போனவர்களின் இல்லங்களுக்கு எமது சங்க உறுப்பினர்கள் சென்று அங்கு தேவைப்படும் உதவிகளை செய்து கொடுப்பார்கள். இறந்தவர்களின் உடலை கழுவி குளிப்பாட்டி சுத்தம் செய்வது கபணிடுவது உடலை சுமந்து செல்வது பின்னர் மண்ணறையின் அடக்கம் செய்வது மேலும் இறந்தவர்களுக்கான மண்ணறையை தோண்டி அடக்கம் செய்வமதற்காக தயார்செய்வது போன்ற எல்லாப் பணிகள் அனைத்தினையும் எங்கள் சங்கத்தின்
உறுப்பினர்கள் எவ்விதமான எதிர்பார்புகளும் இன்றி மிகவும் சிறப்பாக கண்ணியமாக செய்து வருகின்றர்கள். காரணம் எமக்கு நன்மைகளையும் படிப்பினைகளையும் தருகின்ற மனித நேயம் மிக்க இந்தபணியை சங்கத்தின் உறுப்பினர்களும் நிர்வாகிகளும் நீன்ட நெடுங்காலமாக மணமுவந்து மகிழ்வுடன் செய்துவருகின்றனர். அல்ஹம்ந்துலில்லாஹ்.
சமுதாயத்தில் உள்ள ஏழை எளிய மற்றும் வசதியற்றோர்களின் பிள்ளை; எத்தீம்கானாவில் உள்ள பிள்ளைகள் மற்றும் எமது சங்கத்தில் விண்ணப்பம் செய்யும் வெளியூர்
மற்றும் உள்ளுர் ஆண்பிள்ளைகள் அனைவருக்கும் எங்கள் சங்கத்தின் செலவில் சுன்னத்(;எ)மார்க்கக்கல்யாணத்தை வருடம் தோரும் மீலாது பெருவிழா காலங்களில் சிறப்பான முறையில் செய்து வருகிறோம்.அல்ஹம்ந்துலில்லாஹ். சுன்னத் செய்யப்படும் பிள்ளைகளுக்கான புதிய ஆடைகள் மற்றும் தேவையான பொருள்கள் அனைத்தினையும் அவ்வீட்டார்களின் அன்றைய முதல் நாள் செலவுகள் அனைத்தினையும் சங்கம் தமது சொந்தப் பொறுப்பில் செலவுகள் செய்து இவர்களை கண்ணியப்படுத்தி இக்காரியங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றது. இதுவரை இந்தப் பணியில் சுமார் 250 பிள்ளைகள் வரை சங்கம் சுன்னத்(எ)மார்க்கக் கல்யாணம் என்ற சிறந்த பணியை சிறப்பான முறையில் நிறைவேற்றி வைத்துள்ளது.
“சீனதேசம் சென்றாவது சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்” மற்றும் கல்வி பெறுவது (ஆண்ääபெண்) ஆகிய அனைத்து முஸ்லிம்களின் மீதும் கடமையாகும் என்ற நபிமொழியின் வழிகாட்டலின்படி சமுலாயத்தில் உள்ள இளைய தலமுறையினர் கல்வியில் சிறந்தவர்களாக வரவேண்டும் வளர வேண்டும் என்ற முனைப்புடன் எங்களது சங்கம் அதற்கான எல்லாவகையான முயற்சிகளையும் உதவிகளையும் வழங்கி வந்துள்ளது. ஏனெனில் எங்ளது ஊர் கல்வியில் சிறந்தவர்கள் நிறைந்த ஊராகும். எமதூரில் மார்க்க அறிpஞர்கள்( ஆலிம்கள்)மருத்துவர்கள் பொறியாளர்கள் சட்ட வல்லுனர்கள் மற்றும் கல்வி போதிக்கும் விரிவுரையாளர்கள் சிறந்த ஆசிரியர்கள் கனிணிபொறியாளர்கள் என படித்தவர்கள் உயர்கல்வி பெற்றவர்கள் நிறைந்த ஊராகும் எனெவேதான் எங்கள் சங்கம் கல்வி வளர்ச்சியில் அதற்கான வழிகாட்லில் மிகுந்த
இதன் அடிப்படையில் தான் எங்களது சங்கம் மேம்பாட்டிற்காகவும் வளர்ச்சிக்காகவும் தனியாக அறக்கட்டளை ஒன்றினை ஏற்படுத்தி அதன் மூலம் கல்விக்காக அதன் தேவைகளுக்காக நிதி உதவிகள் செய்து வருகின்றது. சங்கத்தின் அறக்கட்டளையிலிருந்து பள்ளி ஆரம்பக்கல்விக்காகவும் பட்டப்படிப்பிற்காகவும் உயர்பட்ட மேற்படிப்பிற்காகவும்
நிதி உதவிகள் மற்றும் எல்லா வகை உதவிகளும் செய்யப்பட்டு நமது ; சமுதாயத்தில் பட்டதாரிகள் உருவாவதற்க்கு-வளர்வதற்க்கும் எங்கள் சங்கம் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.கடந்த காலங்களில் எமது சங்கத்தின் நிதி உதவிகள் மூலமாக இரண்டு நபர்கள் உயர்பட்டமேல்படிப்பினையும் பட்டப்படிப்பினையும் முடித்து பட்டம் பெற்றுள்ளார்கள்.நடப்பு கல்வி ஆண்டில் 2 மாணவர்கள் பொறியில் கல்லுரியிலும் 2 மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரியிலும் படித்து வருகின்றார்கள்.
எமது சங்க அறக்கட்டளையிலிருந்து 1-ஆம் வகுப்புமுதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவயர்களுக்கு பள்ளிக்கல்விக்கட்டணம் பள்ளி சீறுடைகள் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் மற்றும் படிப்பிற்கான எல்லாவிதமான இதர உதவிகளும் வழங்கப்பட்டுääஅவர்களின் கல்வி வளர்ச்சியில் சிறப்பான சேவைகள் இச்சங்கம் செய்துவருகின்றது.இப்பகுதியில் உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆ ம் வகுப்பு மாணவ-மாணவியர்கள் தங்களின் அரசுப்பொதுத்தேர்வில் அதிக மதிபெண்கள் பெற்றுவெற்றிபெற வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தில் பயிர்ச்சிபட்டறைகள் நடத்தி அவர்களுக்கு கல்விக்கான முனைப©ட்டல் வழிகாட்டல்களை இச்சங்கம் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் சிறப்பாக செய்து வருகின்றது.“வெற்றியின் பக்கம்”என்ற பெயரில் இப்பயிற்ச்சிபட்டரைகள் நடத்தப்படுகின்றன.இப்பயிற்ச்சி பட்டறைகள் சிறந்த கல்வியாளர்கள் விரிவுரையாளர்கள்ääசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்hடுகின்றன.இப்பயிற்ச்சி பட்டரைகளில் மாணவ-மாணவியர்களுக்கு உணவுääகுளிர்பானங்கள் மற்றும் எல்லா வகை உதவிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.இதில் சுமார் 250 மாணவ-மாணவியர்கள் கலந்து பயன் அடைந்துள்ளனர்.
இன்ஷாஅல்லாஹ் தொடரும்.......
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy