You are here: Home ARTICLES

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

tamil-articles

பொது விற்பனைக்கு வந்தது பேஸ்புக்கின் பங்குகள்

Print

Saturday, 19 May 2012 21:40

பேஸ்புக் நிறுவனம் கடந்த 18ஆம் திகதி முதல் அமெரிக்காவின் முன்னணி மின் பங்குச் சந்தையான NASDAQ இல் தனது பங்குவிற்பனையை தொடக்கியது.

கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்திற்கு முன்னால் இதற்காக நடைபெற்ற அறிமுக விழாவில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர் பேர்க் மற்றும் அவரது நூற்றுக்கணக்கான பேஸ்புக் நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மார்க் சூகர்பேர் தனது கையெழுத்து பிரதியுடன் இந்நிகழ்வை தொடக்கி வைத்தார். இதையடுத்து FB எனும் இலட்சினை குறியீட்டுடன், 38 அமெரிக்க டொலருக்கு பேஸ்புக் பங்குகள் NASDAQ சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

மொத்தமாக தன்னிடமுள்ள 241 மில்லியன் பங்குகளில் 180 மில்லியன் பங்குகளை இவ்வாறு விற்பதற்கு முன்வந்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

இதன் மூலம், 104 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை பெறுமதியுடன் அமெரிக்காவின் மிக பெறுமதியான வணிக நிறுவனங்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது.

Amazon, Sisco, Ford Motor Co. என முன்னணி நிறுவனங்களின் சந்தை பெறுமதியை கடந்துள்ள பேஸ்புக் நிறுவனம் தற்போது கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அடுத்து மூன்றாம் நிலையில் உள்ளது.

 

Page 1 of 272

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்